அன்புடன் வரவேற்கின்றோம்

புதன், 5 ஜனவரி, 2022

உடனடி மனநிறைவு

 


             குடும்பப் பிரச்சினை,  உடல் ரீதியான பிரச்சனை, காதல் தோல்வி, தன்னுடைய இயலாமை, பொழுதுபோக்கு, துக்கம்  மற்றும் மகிழ்ச்சிக்காக போதைப்பொருட்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் பணக்கார வர்க்கத்தினர் சந்தோஷத்திற்காகவும், மிக ஏழ்மையில் இருக்கும் வர்க்கத்தினர் பிரச்சனைகளை மறப்பதற்காகவும் போதை பொருள் பயன்படுத்துகின்றனர்.

         ஆல்கஹால் மற்றும் புகையிலை பொருட்களை விட கொக்கைன்,  கஞ்சா,  மற்றும் அமின் போன்ற போதைப் பொருட்கள் ரத்தத்தில் கலந்து மரண போதையைத் தருகின்றன.இவற்றை ஒரு முறை பயன்படுத்தினால் அதன் தாக்கத்தில் இருந்து மீள்வது கடினமான காரியமாக இருக்கும்.

         போதைப் பொருட்கள் மற்றும் மதுபானம் போன்றவை நமது மூளையில் இன்பம் தரக்கூடிய டோபமைன்களை  அதிகமாக உற்பத்தி செய்து பரவசமான உணர்வுகளை தூண்ட செய்கிறது. இதனால் பிரச்சனைகளை நினைத்து புலம்பும் மனதிற்கு உடனடியாக நிவாரணம் அளிக்கிறது.ஆனால் இந்த இன்பம் நிரந்தரமான மனநிறைவாக இருக்காது. அதாவது நமது உடலானது போதையில் இருக்கும்போது மட்டுமே நமது உணர்வுகள் கிளர்ச்சி அடைகிறது. போதை தெளிந்து விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு உடலும் மனமும் தள்ளப்படுகிறது. அதை ஈடுசெய்ய அவர்கள்  ஒருமுறை கொடுத்த அந்த விரைவான உணர்வுகளுக்கு ஆசைப்பட்டு அதிக உச்ச இன்ப நிலையை தொடுவதற்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்த தொடங்குவார்கள். திரும்பத் திரும்ப நமது மூளையானது டோபோமைன் கேட்பதால் போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்றனர். 


          மேலும் போதை பொருள் பயன்பாடு திடீரென நிறுத்தப்பட்டால்  பயம்,  பதட்டம், நடுக்கம் மற்றும் தன்நம்பிக்கை இன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே போதை பொருள் கிடைப்பதற்காக அவர்கள் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.

         இதனால் அவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும்.  பொய்சொல்லுதல், திருட்டு போன்ற செயல்களை செய்வார்கள். போதை பொருள் பயன்படுத்துவோர் அதிக நேரம் தனிமையில் இருக்க விரும்புவார்கள். முன்பு மகிழ்ச்சியாக இருந்த விஷயங்களை அவர்கள் அனுபவிக்க முடியாது சாதாரண விஷயங்களில் கவனம் செலுத்தாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மனம் இருந்தால் இந்த போதைபழக்கத்திலிருந்து மீண்டுவிடலாம். 

           எதுவுமே அளவோடு இருந்தால் தான் ஆரோக்கியமாகும் . ஒரு விஷயத்திற்கு அடிமையாகி போவது என்பது முற்றிலும் கொடிய ஒன்றாகும் . அடிமைத்தனம் என்பது ஆல்கஹால் , புகையிலை , உடலுறவு , மதுபானங்கள் போன்றவற்றின் மீது உண்டாகிறது . இந்த அடிமைத்தனத்தினால் , நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் அதிகப்படியான தீமைகள் உண்டாகின்றன . இத்தகைய தீமைகளை கொடுக்கும் இந்த அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வரவே முடியாது என்பது எல்லாம் ஒன்றும் இல்லை . கட்டாயமாக நீங்கள் நினைத்தால் இதிலிருந்து மீண்டு வர முடியும் . இந்த பகுதியில் எப்படி போதைக்கு அடிமையாவதில் இருந்து மீண்டு வருவது என்பது பற்றி காணலாம் 

எழுதுதல் 

           இந்த போதைக்கு அடிமையாதல் உங்களை எந்த விதத்தில் எல்லாம் பாதித்துள்ளது என்பது பற்றி முழுமையாக ஒரு பேப்பரில் எழுதுங்கள் . உங்களது உறவுகளில் இதனால் உண்டான பிரச்சனைகள் , போதைப்பழக்கத்தால் உடலில் உண்டான ஆரோக்கிய பிரச்சனைகள் , நிதிப்பிரச்சனைகள் , போதைப்பழக்கத்தில் உள்ள உங்களை பிறர் எவ்வாறு அவமதிக்கிறார்கள் ? உங்களது மரியாதை சமூகத்தில் குறைந்துள்ள விதம் என்பது பற்றி எல்லாம் நீங்களாகவே உணர்ந்து எழுதுங்கள் . இதிலிருந்து நீங்கள் இதனால் வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை எல்லாம் இழந்துள்ளீர்கள் என்பது தெளிவாக தெரியும்.

 தேவையான மாற்றங்கள் 

          உங்களது போதைப்பழக்கத்தை நீங்கள் ஏன் கைவிட நினைக்கிறீர்கள் , இந்த பழக்கத்தை கைவிடுவதால் உங்களது வாழ்க்கையில் என்னென்ன கிடைக்க போகிறது என்பது பற்றி எழுதுங்கள் . உங்கள் ஆரோக்கியம் , உறவுகள் , பணம் போன்றவற்றில் நல்ல மாற்றம் தெரியும் என்கின்ற போது நீங்கள் போதை பழக்கத்தை கைவிடுவதில் தவறு ஒன்றும் இல்லையே ...

நாள் தேர்வு 

            போதைப்பழக்கத்தை விடுவதன் மூலமாக உங்களுக்கு அதிக நன்மைகள் வருகிறது என்றால் அதனை விடலாம் அல்லவா .. இதனை கைவிடுவதற்காக ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்யுங்கள் . அது உங்களது பிறந்த நாள் , திருமணநாள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் . இன்று முடிவு செய்து நாளையே போதைப்பழக்கத்தை விடுவது எல்லாம் நடக்காத காரியமாகும் . ஒருமுறை போதையை விட்டுவிட்டால் இனி அந்த பக்கம் போகவே கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள் .

ஆதரவு 

            உங்களது நெருக்கமானவர்கள் , மனைவி , நண்பர்கள் என பிறரது ஆதரவை நாடுங்கள் . உங்களது நலனில் அக்கறை உள்ளவர்களுடன் பேசினால் உங்களுக்கு நல்ல மனநிலை உண்டாகும் . நீங்கள் மீண்டும் போதையை நாடும் சூழ்நிலை வரும் போது எல்லாம் அவர்களின் துணை உங்களுக்கு தேவைப்படலாம் . மருத்துவரின் ஆலோசனை பெறுவதும் சிறந்த தீர்வாக இருக்கும் .

தூண்டுதல்கள் 

       நீங்கள் எதற்காக போதைப் பழக்கத்தில் ஈடுபடுகிறீர்கள் என்பதை கண்டறியுங்கள் . வீட்டில் பிரச்சனையா , கடன் தொல்லையா , அலுவலக பிரச்சனையா எது உங்களை தூண்டுகிறது என்பதை அறியுங்கள் . கண்டிப்பாக போதைப்பழக்கம் இவை எதற்கும் சரியான தீர்வாக அமையாது . பிரச்சனையை அதிகரிக்க வேண்டுமானால் செய்யும் .

வாழும் சூழல் 

              உங்களது வாழும் சூழலை மாற்றியமைக்க பழகிக் கொள்ளுங்கள் . உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள் . பாடல் கேளுங்கள் . உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் அடிக்கடி வழிபாட்டில் ஈடுபடுங்கள் .

வெளியிடங்கள் 

          இயற்கையான இடங்கள் , குளிர் பிரதேசங்கள் புண்ணிய தலங்கள் என்று சென்று வாருங்கள் . உங்களது மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள் . மகிழ்ச்சியாக இருங்கள் . 

யோகா

        யோகா வகுப்புகளுக்கு செல்லுங்கள் . இதன் மூலமாக நிச்சயமாக உங்களது மனதும் உடல் ஆரோக்கியமும் மேம்படும் . வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும். 


1 கருத்து: