| மூன்று மனநிலை |
நாத்திகம்
- நாத்திகவாதிகள் என்பவர்கள் எதையுமே அறிவுபூர்வமாக யோசிப்பார்கள்.
- உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மாட்டார்கள்.
- தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே யோசித்து செயல்படக்கூடியவர்கள்.
- சமயம், மொழி, இனம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்ற நாகரீகங்கள் மனித குலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லாது என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டவர்கள்.
ஆத்திகம்
- உணர்வு சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே மதிப்பளிக்க கூடியவர்கள்.
- முன்னோர்கள் வகுத்த கோட்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றும் பழமைவாதிகளாக இருப்பார்கள்.
- தன்னுடைய சமயம், மொழி ,இனம் மற்றும் கலாச்சாரம் மட்டுமே உயர்வானது என்ற எண்ணம் உடையவர்கள்.
- தான் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் கொள்கைகளை பின்பற்றுவதை விட்டுவிட்டு அவற்றை முன்மொழிந்த தலைவர்களுக்கு சிலை வைத்தும், விழா எடுத்தும் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள்.
- இவ்வாறு செய்வதன் மூலம் தன்னை உணர்வுபூர்வமாக கிளர்ச்சி அடையச் செய்வார்கள்.
தேசியம்
- ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், விஞ்ஞானத்திற்கும் குறிப்பிட்ட தேசிய இன மக்களின் அதிகாரத்தை ஒடுக்குவது, அவர்களுடைய மொழி , இனம், கலாச்சாரங்களை அழிக்க முற்படுவது, நிலங்களையும், வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டுவது போன்ற ஏகாதிபத்திய நடவடிக்கைகளை தடுக்க கூடியவர்கள் தேசியவாதிகள்.
- வளர்சியை தடுக்கும் பழமைவாதத்தை ஒழித்து நிகழ்காலத்திற்கு ஏற்றபடி தனது கொள்கையை புதுப்பிக்க கூடியவர்கள்.
- ஒரு முடிவு எடுக்கும்போது அறிவு பூர்வமாக மட்டுமே யோசிக்காமல் அதில் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து செயலாற்ற கூடியவர்கள்.
- உணர்வுகள் அதிகமானால் அறிவு குறைந்து விடும் .அறிவு பூர்வமாக மட்டுமே செயல்பட்டால் மனிதனாக இல்லாமல் எந்திரமாகத்தான் இருக்க முடியும்.
ஆகவே,
மனிதனாக நீ வாழ வேண்டும் மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா!
தனியுடமை கொடுமை தீர புரட்சி செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா !
என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக