ஒரு ஊரில் பயந்த சுபாவம் கொண்ட எளிதில் ஏமாந்து போகக் கூடிய சிறுவன் வாழ்ந்து வந்தான். இதனால் அவனது பாடசாலையில் முட்டாள் என்று அனைவராலும் புறக்கணிக்கப் பட்டு படிப்பிலும் விளையாட்டிலும் பின் தங்கிய மாணவனாக இருந்தான். தன் நிலையை நினைத்து தினமும் வருந்திக்கொண்டு இருப்பதை கவனித்த அவனது தந்தை ஏன் எதையோ பறிகொடுத்தவன் போல இருக்கிறாய் உனக்கு என்ன ஆயிற்று ? என்று கேட்டார்.
அச்சிறுவன் தனது பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடம் கூறினான். இதைக்கேட்ட அவனது தந்தை புன்னகையுடன் கவலைப்படாதே இதைத் தீர்ப்பதற்கு நம்மிடம் வழி இருக்கிறது என்று கூறி வீட்டிலிருந்து ஒரு அழகிய கல்லை எடுத்துவந்து அச்சிறுவனின் கையில் கொடுத்து, இதை நாம் நகரின் சந்தைக்குச் சென்று முதலில் மீன் தொட்டி வியாபாரியிடமும், இரண்டாவது வெள்ளி மோதிரம் வியாபாரிடமும் மற்றும் கடைசியாக மாணிக்க வியாபாரியின் கடைக்குச் சென்று இதை விற்க வேண்டும் என்று கூறு. எவ்வளவு விலைவேண்டும் என்று அவர்கள் வினவினால், அதை நீங்களே கூறுங்கள்? என்று விலையைக் கேட்டதும் இதை யாரிடம் விற்காமல் கல்லை எடுத்துக் கொண்டு என்னிடம் வா என்றார்.
தந்தையின் சொல்லுக்கிணங்க முதலில் மீன் தொட்டி வியாபாரி கடைக்குச் சென்று இக்கல்லை விற்க வேண்டுகிறேன் என்றான். அதற்காக வியாபாரிகள் பார்ப்பதற்கு அழகாக உள்ளது மீன் தொட்டியில் வைத்தால் நன்றாக இருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்னிடம் கொடு என்றார். முடியாது என்று கூறிவிட்டு வெள்ளி மோதிரம் வியாபாரியின் கடைக்கு சென்று இக்கல்லை விற்கவேண்டும் என்றான். அதற்கு வியாபாரி இது பிரகாசமாக ஒளி வீசிகின்றது. இதை மோதிரத்தில் பதித்தால் மிகவும் அழகாக இருக்கும் பத்தாயிரம் தருகிறேன் என்றார். அச்சிறுவன் முடியாது என்று கூறிவிட்டு மாணிக்க வியாபாரியின் கடைக்கு சென்று இக்கல்லை விற்க வேண்டுமென்றான். அதை உற்று நோக்கிய வியாபாரி இத்தகைய அழகிய பொக்கிஷ கல் உனக்கு எப்படி கிடைத்தது வீட்டிலிருந்து பெரியவர் எவரும் கூட்டிட்டு வா இதற்கு 5 கோடி தருகிறேன் என்றார்.
முடியாது என்று விட்டு அவனது தந்தையிடம் ஓடி வந்து, தந்தையே இக்கல் ஒரு மீன் தொட்டி வியாபாரியிடம் இதன் பெரும் மதிப்பு 1,000 எனவும் வெள்ளி மோதிரம் வியாபாரிடம் இதன் பெருமதிப்பு 10,000 எனவும் மாணிக்க வியாபாரியிடம் இதன் பெரும் மதிப்பு 5 கோடி எனவும் கூறினார்கள். இக்கல் பெருமதியற்றதா அல்லது இக்கலை வைத்திருப்பவர்கள் இதன் பெருமதியை மழுங்க செய்கிறார்களா? என்று கேட்டான்.
நிச்சயம் இக்கல் பெருமதிப்பு உள்ளது தான் இக்கல்லை வைத்திருப்பவர்கள் அதன் பெருமதிப்பை மழுங்கடிக்கிறார்கள். இது 5 கோடி என்ன 500 கோடிக்கு விற்க முடியும். இது நமது குடும்ப பொக்கிஷமாகும். பல நூறு வருடங்களாக இதை பாதுகாத்து வருகிறோம். இது உலகிலேயே மிக அரிய வகை கல் ஆகும். இதன் பெருமதியை அத்தனை எளிதில் எவராலும் மதிப்பிட முடியாது.
நீயும் நீக்கல் போன்றவனே உனது பெருமதி எல்லையற்றது. ஆனால் நண்பர்கள் ஆசிரியர்கள் என உன்னை சூழ்ந்து இருப்பவர்கள் அப்பெருமதியை அறிவதில்லை. அதனால் அவர்கள் உன்னை ஒதுக்குகின்றனர் உதவாக்கரை என்று கூறுகின்றனர். நிச்சயம் இது அவர்களது அறியாமையாகும். நீ உண்மையிலேயே உனது பெரும் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்பினால் வாழ்வில் எவரும் அடைய முடியாத ஒரு வெற்றியை அடைய விரும்பினால் உன்னை மட்டம் தட்டும் சிறுமையானவர்களிடமிருந்து ஒதுங்கி உனது திறமைக்கு மதிப்பளித்து அவற்றை ஊக்குவிக்கும் மனிதர்களிடம் சேர்ந்து கொள்ள வேண்டும். ஒன்றை நினைவு கொள் மகனே இக்கல் மீன் தொட்டியினுள் மூழ்கி கிடக்கும் வரை இது ஒரு சாதாரண கல் ஆகும் எப்போது இக்கல் மாணிக்க வியாபாரிகளுக்கு செல்கிறதோ அவை இது ஒரு பொக்கிஷமாக மாறுகிறது ஆனால் இது தன் இடத்தை மாற்றிக் கொள்ளாமல் மீன் தொட்டியினுள் தேங்கிக் கிடக்க முடிவு எடுத்தால் தன் வாழ்நாள் முழுவதும் இது ஒரு உதவாக்கரை ஆகவே வாழும்.
அது போலவே நீயும் உன்னை வளர்த்துக் கொள்ளாமல் இச்சூழலிலேயே இருந்துவிட்டால் நீயும் உன் வாழ்நாள் முழுவதையும் ஒரு உதவாக்கரை ஆகவே வாழ்ந்து மடிவாய். நீ யாராக வாழவேண்டும் என்ற முடிவு உன் கையில். சிந்தித்து செயலாற்று என்று கூறினார்.
x
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக