அன்புடன் வரவேற்கின்றோம்

புதன், 8 டிசம்பர், 2021

உழைப்பே உயர்வுதரும்

Hard Work
வாழ்க்கையில் சாதனை படைத்த பெரும்பாலான மனிதர்கள் சாமனியர்களாக பிறந்தவர்கள்தான் நீங்களே யோசித்துப்பாருங்கள்அடித்தட்டு மனிதனாய் பிறந்து சாதனை படைக்கிறான்  ஒரு மனிதன். ஆனால் அவர்களுக்கு பிறந்து கோடீஸ்வரர்கள் வளர்ந்த அவரது பிள்ளைகள் அந்த அடித்தட்டு மனிதனின் சாதனையை மிஞ்சவில்லைஆபிரகாம் லிங்கனாக இருக்கட்டும் அப்துல் கலாமாக இருக்கட்டும் உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸாக இருக்கட்டும். கம்ப்யூட்டர்தொழில் துறை, வர்த்தகம்அரசியல், பொருளாதாரம் என்று இன்று மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் சாமானியராக பிறந்து இமாலய சாதனை படைத்தவர்கள் தான்.
ஆனால் இவர்கள் கையில் பிடித்த சூட்சுமம் உழைப்புதொடர்ந்த  உழைப்பு அறிவுப்பூர்வமான உழைப்புநுணுக்கங்களுடன் நிறைந்த அறிவு பூர்வமான உழைப்பு10000 மணி நேரம் ஒரு துறையில் உழைத்துவிட்டால் அத்துறையில் நாம் ஜீனியஸ் ஆகிவிடுவோம்அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி 10000 மணி நேரம் அந்த துறையில் உழைக்க வேண்டும்ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வருடத்திற்கு 300 நாட்கள் உழைத்தால் தொடர்ந்து நான் நான்கு ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும் அப்போதுதான் அந்தத் துறையில் சாதனை என்பது துளிர்விடும்.  நண்பர்களே படிப்பறிவு இல்லாதவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். மிகப்பெரிய பின்புலம் இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். நற்சிந்தனையும்நற்குணங்களும் இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்தானத்தை அடைந்து இருக்கிறார்கள்.
ஆனால் எந்த ஒரு சாதனையாளரும் உழைக்காமல் அந்த ஸ்தானத்தை அடைந்து விடவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்நீங்கள் கேட்கலாம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் உழைக்கும் தொழிலாளி கூட உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையில் என்ன முன்னேற்றத்தை கண்டார். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் சுமை தூக்கும் தொழிலாளி கூடகடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் அவர் வாழ்க்கையில் என்ன முன்னேற்றத்தை கண்டிருக்கிறார்நண்பர்களே  உடல் உழைப்பு என்பதைவிட அறிவால் உழைப்பது என்பது தான் முக்கியம். வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க வேட்டை இங்கு உடல் பலம் உள்ளவர்களுக்கு மட்டும் வெற்றி கிட்டாது அறிவில் பலம் உள்ளவர்களுக்கு தான்  வெற்றி கிட்டும் காரியங்கள் செய்வது மாத்திரமல்ல வாழ்க்கை காய் நகர்த்துவது தான் வாழ்க்கை.
நமக்கு எதிராக நிற்கும் அத்தனையும் நமது தடைக்கற்கள் அதை எப்படி சாதுர்யமாக தகர்த்தெறிந்து எப்படி முன்னேறுவது என்பதை யோசித்து யோசித்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்சரியான நேரத்தில் முறையான முடிவுகளை எடுப்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள்தனக்குக் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களே எல்லாம் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள் மட்டும்தான் வெற்றியாளர்கள். ஒவ்வொரு மணித்துளியும் சேமியுங்கள் ஒவ்வொரு மனிதனையும் சம்பாதிக்க தொடங்குங்கள்
உடல் கேட்கும் ஆசைகளையும் மனம் கேட்கும் இச்சைகளையும் உங்கள் அறிவைக் கொண்டு கடிவாளமிடுங்கள். உங்களை இயக்குவது நீங்களாக மாத்திரம் இருக்க வேண்டும்நீங்கள் இயங்குவது உங்கள் சுய சிந்தனையிலும்  அறிவாற்றலாலும் மட்டுமே இருக்க வேண்டும்உங்கள் வெற்றியை உரக்கச் சொல்லுங்கள் ஊர் முழுவதும் சொல்லுங்கள்அது உங்கள் மேல் இருக்கும் தன்னம்பிக்கையை மேன்மேலும் மேம்படுத்தும்உங்கள் தோல்விகளை உள்மனதில் கூட நினைக்காதீர்கள்அது உங்கள் செயல்பாட்டை முடக்கி விடும். தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்வது பாடங்கள் மாத்திரம்தான் தோல்வியே சுமப்பதற்கு அது நம் வாரிசு கிடையாது.   நான் வெற்றியாளர் நான் வெற்றியாளர் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்நாம்  உறங்கும்போதும் உறங்காமல் இந்த நெருப்பு எரிந்து கொண்டே இருக்கட்டும.
x

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக