அன்புடன் வரவேற்கின்றோம்

திங்கள், 12 அக்டோபர், 2020

வாழ்க்கை அழகானதே! வாழ்க்கை வாழ்வதற்கே!

Life




வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே! தயக்கமும் குழப்பமும் இருக்கும் வரை உன்னில் எந்த மாற்றமும் ஏற்படாது. 
மனம்விட்டு வேதனை விலக்கு உனக்கான பாதையை தென்படும்.
 நீ நிற்பது பயிற்சித் தளம் கற்றுக் கொள்வது என முடிவெடுத்து விட்டால் பின்பு எல்லாம் இங்கு பாடம் தான்.

 நீ எத்தனை வருடம் வாழ்ந்தாய் என்பதை வயதைக் கொண்டு கணக்கிடாதே!  நீ வாழ்ந்ததை கொண்டு கணக்கிட்டு பார் நீ இன்னும் வாழவில்லை என்பது புரியும்.
பகையினில்  பகைகொள்.
 நட்பெனில்  நீ நட்பு கொள்.
எல்லோரையும் நம்புவது உன்னை முட்டாளாக்கும்.
 உன்னை நம்பாமல் இருப்பது உன்னை கோழையாகும்.
 
அடுத்தவன் சொல்படி வாழ்வதை விட அடுத்தவன் சொல்லும்படி வாழ்.
உனக்கும் உன் வாழ்விற்குமான அர்த்தங்களை தேடு.
 பிடிக்காததை செய்து நல்லவன் என பெயர் எடுப்பதைவிட மனம் பிடித்த நல்லதை செய்து கெட்டவன் என பெயரிடு.

உருண்டோடும் வருடமே உன்னை வளர்க்காது.
காயங்களும் வலிகளுமே உன்னை வளர்க்கும்.
 உடற்பயிற்சிக்கூடம் உன் உடலை வளர்க்கும் ஆனால் தைரியத்தை வளர்க்காது.
 சூழலை சந்தித்தாலே அது சாத்தியம்.

உன் வாழ்வை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா.
யாரையும் பகைக்காதே! பழிக்காதே! நகர்வது வாழும்,  நிற்பது வீழும்.
என்ன ஆயினும் நகர்ந்து செல்.
உன்னைத் தாக்க நினைப்பதை தூக்கி எறிந்து செல்.

 எந்நிலையிலும் வாழ்க்கை அழகானதே!  வாழ்க்கை வாழ்வதற்கே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக