![]() |
மாஸ்லோவின் மனித தேவையின் படியமைப்பு கோட்பாடு என்பது ஆப்ரகாம் மாஸ்லோ என்பவர் 1943ல் அறிமுகப்படுத்தப்பட்ட உளவியல் சார்ந்த கோட்பாடு ஆகும்.
இந்த பிரமிடு கோட்பாடு என்பது மனிதன் வெவ்வேறு நிலையில் இருக்கும் பொழுது அவனுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பற்றி விளக்குகிறது. இந்தக் கோட்பாட்டின் ஆரம்ப கட்ட நிலையில் இருந்து ஐந்தாம் நிலை வரைக்கும் உள்ள அடிப்படை தேவைகள் பிரமிடு வடிவத்தில் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் உலகில் இன்னும் 83% மக்களுக்கு உடலியல் சார்ந்த அடிப்படை தேவைகளை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
1. உடலியல் சார்ந்த தேவைகள் (pysiological Needs)
இவைகளை நமக்கு ஒருவர் சொல்லிக் கொடுத்துதான் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. நமக்கு பசிக்கும்போது சாப்பிடுவோம். இயல்பாகவே நாம் சுவாசிப்போம். தூக்கம் வரும் போது தானாகவே தூங்குவோம். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல்,. அதேபோல செக்ஸ் தேவைப்படும்போது இனப்பெருக்க செல்கள் அதை நோக்கி பயணிக்க தூண்டும். இந்த செயல்பாடுகள் உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் அதாவது, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன, மனிதர்கள், தாவரங்கள் மற்றும் மரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். இதுவே அனைத்து உயிரினங்களின் அடிப்படை தேவையாகும்.
2. பாதுகாப்பு(Safety)
உடலியல் சார்ந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், இன்று கிடைப்பது நாளைக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நமக்கு வேலை, உடல்வலிமை, வீடு, சொத்துக்கள், குடும்பம், இவற்றை ஒழுங்காகக் கடைப்பிடித்து வருவதற்காக நல்ல அறநெறிகள் போன்றவையெல்லாம் தேவைப்படுகிறது.
3. நட்பு வட்டாரம்(Love/Belonging)
முதல் இரண்டு தேவைகளும் நிறைவடைந்த பின்பு தான் நட்பு, காதல், சமூகத்தின் மீதான அக்கறை, உறவினர்கள், நண்பர்கள் போன்ற நட்பு ரீதியான வட்டாரங்கள் தேவைப்படுகின்றது.
4. நன்மதிப்பு(Esteem)
மதிப்பு, மரியாதை, சமூக அந்தஸ்து, நமக்கென்று தனியே ஒரு குறிக்கோள், லட்சியம், கனவு, நம் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய குழு மற்றும் தலைமைப் பொறுப்பு போன்றவைகளெல்லாம் இந்த கட்ட நிலையில்தான் தேவைப்படுகின்றது.
5. சுயமாக செயல்படுதல்(Selff-actualization)
இந்த நிலையில்தான் நாம் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் ஒரு படைப்பாளியாக மாறுதல், பொறுப்புகளை மற்றவருக்கு பிரித்துக் கொடுத்தால், சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் போன்ற தனிப்பட்ட முடிவுகளை தானே செயல்படுவது இந்த நிலையில்தான் உள்ளவையாகும்.
மிகவும் பயனுள்ள கருத்து
பதிலளிநீக்கு